- இந்தியா
- ஐ.நா.
- இஸ்ரேல் -
- ஹமாஸ் போர்
- நியூயார்க்
- ருசிரா காம்போஜ்
- இஸ்ரேல்
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
- மேற்கு ஆசியா
- ருசிரா
நியூயார்க்: இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அப்பாவிகள் பலியாவதை கண்டிக்கிறோம் என்று ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி ருசிரா காம்போஜ் பேசினார். மேற்கு ஆசியாவில் நிலவும் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்தில், ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் பேசுகையில், ‘இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நடந்து வரும் போரில், அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் பலியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அதேநேரம் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதல்களையும், அதன் பின்னணியில் இருப்பவர்களை மீது நடவடிக்கை எடுப்பதையும் ஆதரிக்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. காசா மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட பிராந்திய தலைவர்களுடன் இந்திய தலைமை தொடர்பில் உள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு இரண்டு தவணைகளாக 16.5 டன் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உட்பட 70 டன் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளோம். இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்’ என்று கூறினார்.
The post இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அப்பாவிகள் பலியாவதை கண்டிக்கிறோம் ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி பேச்சு appeared first on Dinakaran.