×

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து: சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரம்..!!

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட இஞ்சினை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் ரயில்வே பணிமனை உள்ளது. இங்கிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எழும்பூருக்கு 11.30 மணிக்கு சென்றுக் கொண்டிருந்தது. எழும்பூருக்கு ரயில் நிலைய நடைமேடையை நோக்கி வந்த போது சுமார் 50 மீட்டருக்கு முன்பாக ரயில் இன்ஜினின் மூன்று சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியிருக்கிறது.

ரயில் இன்ஜின் தடம் புரண்ட காரணத்தினால் தற்போது, அந்த பகுதியில் ரயில்வே ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக கோபாலபுரம் யாரிலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய ரயில்களை மீண்டும் யாருக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்வதற்காக இந்த இன்ஜின் ஆனது பயன்படுத்தப்படும். பெரிய சத்தத்துடன் இந்த சம்பவம் நடைபெற்றதால் அங்கிருந்த பொதுமக்கள், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது, ரயில் போக்குவரத்துக்கு எந்த விதமான பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தனியான காட்சியில் தான், இந்த ரயில் இன்ஜினானது கொண்டு வரப்பட்டதாகவும், தடம் புரண்ட ரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான காரணம் குறித்தும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சக்கரங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்து: சீரமைப்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Rampur railway station ,Chennai ,Sethupat, Chennai ,Elhampur ,Jalhampur ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...