சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தது குறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாயமா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கை ஜனவரி 19-க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தது குறித்து ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.