×

ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.1.30 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள்

*அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.1.30 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
ரெட்டியார்சத்திரம், காமாட்சிபுரம், டி.பண்ணைப்பட்டி, நீலமலைக்கோட்டை, புதுசத்திரம், பலக்கனூத்து ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திண்டுக்கல் எம்.பி ப.வேலுச்சாமி முன்னிலையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, முதலமைச்சர் கிராமபுற மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திடவும், பொதுமக்களின் குடிநீர், அத்தியாவசிய பொருட்களின் தேவை போன்றவற்றை பூர்த்தி செய்வதற்காக, தொடர்ந்து அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் நோக்கிலும், அரசின் திட்டங்களை பொது மக்கள் எளிதில் வந்து அலுவலகங்கள் மூலமாக பெற்று செல்வதற்காகவும், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக எதிர்கால தேவையினை கருத்தில் கொண்டும், மக்கள் தொகையின் அடிப்படையிலும், வளர்ச்சித்திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் கொத்தப்புள்ளி ஊராட்சியில் ரூ.23.85 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டடம், எல்லைப்பட்டி, கோட்டைப்பட்டி, இராமலிங்கம்பட்டி ஆகிய இடங்களில் தலா 1 வீதம் 33.53 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடைகள், நீலமலைக்கோட்டையில் ரூ.9.07 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம், நீலமலைக்கோட்டை மற்றும் கரியகவுண்டன்பட்டியில் ரூ.20.00 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடைகள், புதுச்சத்திரத்தில் ரூ.23.85 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், நரிப்பட்டி, ஒண்டிவாடநாயக்கன்பட்டியில் ரூ.20.00 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடைகள் என மொத்தம் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ரெட்டியார்சத்திரம் பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட இருந்தன. ஆட்சி மாற்றத்தின் காரணமாக பணிகள் தள்ளி போகவே, தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் உடனடி நடவடிக்கையாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பொது மக்களின் கால நேரத்தை குறைக்கும் வகையில், அவர்கள் வீட்டு அருகில் பொருட்கள் பெற்றுக்கொள்வதற்காக நியாயவிலைக்கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

கூடுதலான குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளில் நியாயவிலைக்கடைகளை இரண்டாக பிரிக்கப்பட்டு, பகுதி நேர கடைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எல்லைப்பட்டி, கோட்டைப்பட்டி, இராமலிங்கம்பட்டி ஆகிய கிராம மக்களுக்காக நியாயவிலைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் சிவகுருசாமி,

மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்புலட்சுமி, மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர், ராஜேஷ் பெருமாள், மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன்,ஒன்றிய கவுன்சிலர்கள் விவேகானந்தன், காளீஸ்வரி, நாகலட்சுமி, கொத்தபுள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி அன்பரசு, காமாட்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ் பிரபு, பண்ணப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி, புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, நீலமலைக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராதாதேவி சாமிநாதன், பழக்கனூத்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணிராமசாமி,

ராமபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜா, வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன்,துணைத் தலைவர்கள் ரெங்கசாமி, வைரமணி, கிருஷ்ணவேணி காளியப்பன்,கணேசன், கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் காத்தவராயன், உதவி மின் பொறியாளர் ரமேஷ் கண்ணன், காமாட்சிபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் சண்முகம், பழக்கனூத்து கூட்டுறவு சங்கம் செயலாளர் சரவணன், சுற்றுச்சூழல் அமைப்பாளர் மலைச்சாமி,வடக்கு வட்டார தலைவர் முருகேசன், இளைஞர்மேம்பாட்டு துணை அமைப்பாளர் அருண்,கோபி, கமலக்கண்ணன், முனியப்பன்,உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.1.30 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Panchayats ,Redyarchatram Union ,Minister ,I.Periyaswamy ,Rediyarchatram ,Rediyarchatram Union ,Redyarchatram ,Kamachipuram ,D. Pannaipatti ,Neelamalaikotta ,Puduchattaram ,Palakanoothu ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து