×

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அனுமதிபெற்று துப்பாக்கிகள் வைத்திருப்போர் உடனடியாக ேபாலீசில் ஒப்படைக்க வேண்டும்

*எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவு

மோகனூர் : நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வந்தவுடன், நாமக்கல் மாவட்டத்தில் அனுமதிபெற்று துப்பாக்கி பயன்படுத்தி வருவோர் அதனை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, காவல் துறையில் 3 ஆண்டுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பதட்டமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மோகனூர் காவல் நிலையத்தில் நேற்று எஸ்பி., ராஜேஷ்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அனுமதிபெற்று துப்பாக்கி பயன்படுத்தி வருவோரின் ஆவணங்களை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நீதிமன்ற வாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், குற்ற சரித்திரம் உள்ள குற்றவாளிகள் ஆர்டிஓ முன்பாக ஆஜராகி பிணை பத்திரம் ஒப்படைக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 1,003 நபர்கள் அனுமதிபெற்று துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், அனுமதிபெற்று துப்பாக்கிகள் வைத்திருப்போர் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, தங்களின் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு எஸ்பி., ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.

The post நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அனுமதிபெற்று துப்பாக்கிகள் வைத்திருப்போர் உடனடியாக ேபாலீசில் ஒப்படைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : SP Rajeshkannan ,Mohanur ,SP ,Rajeshkannan ,Namakkal district ,Dinakaran ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு