×

அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி ரேஷன் கடையில் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாரர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் இதன் மூலம் பயனடைவர். மேலும் இத்திட்டத்திற்க்காக ரூ.2436 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு உரிய முறையில் பொங்கலுக்கு முன்பாக 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது.

The post அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Seethammal Colony Ration Shop ,Alwarpet, Chennai ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...