×

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு: விரைவில் புதிய அரசு வழக்கறிஞர் நியமிக்க முடிவு!

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1989 முதல் 1991 வரை திமுக ஆட்சியில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம்.

1996 முதல் 2001 வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராகவும் 2002 முதல் 2008 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் சண்முகசுந்தரம். இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.

மேலும்,தமிழ்நாடு அரசிடமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் தனது முடிவை அவர் தெரிவித்துவிட்டார் எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகுவதாகவும், அரசு பொறுப்பில் இருந்து விலகி தனியாக வழக்கறிஞர் தொழிலை தொடர உள்ளதாகவும் அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, விரைவில் புதிய அரசு தலைமை வழக்கறிஞரை தமிழ்நாடு அரசு நியமித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வழக்கறிஞராக பி.எஸ். ராமனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு: விரைவில் புதிய அரசு வழக்கறிஞர் நியமிக்க முடிவு! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chief Public Prosecutor ,Shanmugasundaram ,Chennai ,Chief Advocate ,Tamil Nadu ,DMK ,Dinakaran ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...