×

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யூ தொடர் உண்ணாவிரதம்

 

திருச்சி. ஜன.10: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் எஸ்ஆர்எம்யு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ரயில்வே தனியார் மைய முடிவை உடனடியாக கைவிட வேண்டும், ரயில் நிலையங்களை விரைவு ரயில்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது, ரயில்வே பணிகளை தனியாருக்கு தாரைவார்த்து நிரந்தர வேலையை பறிக்கக் கூடாது,

காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று எஸ்ஆர்எம்யூவின் துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் எஸ்ஆர்எம்யுவின் பொதுச் செயலாளர் கண்ணையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் உதவி தலைவர் ராஜா ஸ்ரீதர் துணை பொதுச்செயலாளர் ஈஸ்வர்லால் உள்ளிட்ட ரயில்வே பொன்மலை பணிமனை மற்றும் ரயில்வே ஜங்ஷனில் பணியாற்றக்கூடிய எஸ் ஆர் எம் ஏ சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யூ தொடர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : SRMU ,Trichy ,Trichy Railway Divisional ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்