×

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே கீழையூர் அரசு பள்ளியில் அரசின் காய்கறி தோட்டம் திறப்பு

 

ஒரத்தநாடு, ஜன.10: ஒரத்தநாடு அருகே திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கல்வித்துறை ஏற்படுத்திக் கொடுத்த காய்கறி தோட்டத்தைமாவட்ட கவுன்சிலர் விஜி கதிரவன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, மாவட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் ராம் மனோகர், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சுரேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவி ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முனைவர்ராம் மனோகர் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் காப்பதின் அவசியம் மற்றும் புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தி சுற்றுச்சூழல் மாசுபடாமல் நாம் பொங்கல் திருவிழாவை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தினார். முனைவர் ராம் மனோகருக்கு நினைவு பரிசாக மாவட்ட கவுன்சிலர் விஜிகதிரவன் மஞ்சப்பை வழங்கினார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் வரவேற்றார். பள்ளி துணை தலைமை ஆசிரியர் திருக்குமரன், அறிவொளி ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதுகலை ஆசிரியர் கர்ணன் நன்றி கூறினார். விழாவில் இருபால் ஆசிரியர்கள் தேசிய பசுமை படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே கீழையூர் அரசு பள்ளியில் அரசின் காய்கறி தோட்டம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Keehoyur Government School ,Thanjavur Orathanadu ,Orathanadu ,District Councilor ,VG Katiravan ,Tamil Nadu Environment and Education Department ,Tirumangalakottai Keehoyur Government Higher Secondary School ,District Environmental Awareness Coordinator ,
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...