×

பொங்கல்பரிசு தொகுப்பிற்காக கரும்பு கொள்முதல் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு

 

தஞ்சாவூர், ஜன.10: சூரக்கோட்டை ஊராட்சியில் பொங்கல் திருநாளையொட்டி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக கொள்முதல் செய்யும் கரும்பின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப ஆய்வு செய்தார். தஞ்சாவூர் அருகே உள்ள சூரக்கோட்டையில் செல்வராசு,நிலத்தில் கரும்பு உற்பத்தியினை பார்வையிட்டார். பின்னர், விவசாயிகளின் நிலங்களில் நிலக்கடலை பயிர் செய்யப்பட்டுள்ளதையும். மேலும்,மடிகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட பார்வையிட்டு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்பட உள்ள சர்க்கரை, அரிசி, வேட்டி, சேலை தரம் மற்றும் இருப்பு குறித்தும்.

கரும்புகள் வைப்பிடம் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதற்கான டோக்கன் விநியோகம் குறித்தும் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், பார்வையிட்டார்.ஆய்வின் போது வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் .தமிழ்நங்கை, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஈஸ்வர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், வேளாண் உதவி இயக்குநர் அய்யம்பெருமாள். வட்டாட்சியர் அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பொங்கல்பரிசு தொகுப்பிற்காக கரும்பு கொள்முதல் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pongalparisu ,Thanjavur ,Deepak Jacoba ,Pongal ,Pongal festival ,Surakottai panchayat ,Surakottai ,Selvarasu ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...