×

கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

 

கந்தர்வகோட்டை,ஜன.10: கந்தர்வகோட்டையில் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த தன்னார்வலர்களுக்கு பயிற்சி வட்டார வள மைத்தில் நடைபெற்றது. பயிற்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட புதிய பாரத திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். பார்வையின் போது இல்லம் தேடிக்கல்வி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா உடனிருந்தார்.

புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சியில் தினசரி செய்தித்தாள், வங்கி பணம் எடுத்தல், வாழ்வியலும் ஆளுமையும், பேரிடர் மேலாண்மை,சாலை பாதுகாப்பு அஞ்சலகத்தில் பணம் செலுத்தல், எண்கள் அறிவோம், அடிப்படை கணித திறன்கள், சட்டங்கள் அறிவோம் என்ற தலைப்பில் தகவல் அறியும் உரிமை சட்டம், இலவச கல்வி சட்டம்,போக்சோ சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் 15 வயது முதல் 55 வயது வரை உள்ள எழுதப் படிக்காத தெரியாதவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கும் தன்னார்வலர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் பாரதிதாசன், ராஜேஸ்வரி, நந்தினி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

The post கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Bharat Literacy Project ,Gandharvakot District Resource Centre ,Gandharvakottai ,Regional Resource Center ,Pudukottai District Kandharvakottai Union ,Kandarvakottai District Resource Center ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...