×

ஜெயங்கொண்டத்தில் நெல் வயல்களில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு

 

ஜெயங்கொண்டம்,ஜன.10: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் .பாலையா வேளாண்மைத்துறை செயல்படுத்தி வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். விதை கிராமத் திட்டத்தின்கீழ் தேவாமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் அன்பழகன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரது சாகுபடி நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சி.ஆர்-1009 நெல் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டு அதிக மகசூல் பெறும் தொழில் நுட்பங்களை விளக்கினார்.

மேலும், அதே கிராமத்தில் ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்துறை சார்பில் நெற்பயிரில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பூச்சி, நோய் கண்காணிப்புத் திடலைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிலால் கிராமத்தில் தமிழக அரசின் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கரும்பு சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயி அன்பழகன் அவர்களது கரும்பு வயலைப் பார்வையிட்டு அரசு குறிப்பிட்டுள்ளவாறு கரும்பின் தரம் உள்ளதா என ஆயவு செய்தார்.

விதைப்பண்ணை விவசாயிகளுடன் கலந்துரையாடி தொழில் நுட்ப அறிவுரைகளையும் மகசூலை அதிகரிக்கும் தொழில் நுட்பங்களையும் விவசாயிகளுக்கு விளக்கினார். ஆய்வின்போது அரியலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் பழனிசாமி;, வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்ரமணியன், வேளாண் அலுவலர் மகேந்திரவர்மன், உதவி விதை அலுவலர் கொளஞ்சி, உதவி வேளாண் அலுவலர் செல்வம்; மற்றும் முன்னோடி விவசாயிகள் உடனிருந்தனர்.

The post ஜெயங்கொண்டத்தில் நெல் வயல்களில் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Fields ,Jayangkonda ,Jayangondam ,Ariyalur district ,Palaya ,Department of Agriculture ,Anbazhagan ,Rajendran ,Devamangalam ,Paddy Fields ,Dinakaran ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...