×

அரியலூர் அருகே தொற்று நோய் தடுப்பு பரிசோதனை முகாம்

 

அரியலூர், ஜன. 10: அரியலூர் அடுத்த கயர்லாபாத் கிராமத்திலுள்ள அரசு சிமென்ட் ஆலை பணியாளர்களுக்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தொற்று நோய்களுக்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை முகாம் நேற்று நடைபெற்றது.

அரசு சிமென்ட் ஆலை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமை சட்டப் மன்ற உறுப்பினர் சின்னப்பா தொடக்கி வைத்து, ரத்த அழுத்த பரிசோதனை செய்துக் கொண்டார். முகாமிற்கு கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அஜித்தா, வட்டாட்சியர் ஆனந்தன், அரசு சிமென்ட் ஆலை பொது மேலாளர் ரவிச்சந்திரன் ,மதிமுக மாவட்ட செயலாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மருத்துவர் சுந்தர்ராஜன், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா , மாவட்ட தொற்றா நோய் மருத்துவர் காயத்ரி, அரசு சிமென்ட் ஆலை மருத்துவர் மீனா, சுகாதாரப் மேற்பார்வையாளர் வகீல் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, சிமென்ட் ஆலையில் பணிபுரியும் 900 பணியாளர்களுக்கு இதய நோய், பக்கவாதம், புற்றுநோய், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்கள் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

The post அரியலூர் அருகே தொற்று நோய் தடுப்பு பரிசோதனை முகாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Department of Medicine and Public Welfare, Public Health and Preventive Medicine Department ,Kairlabad ,Dinakaran ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...