×

ஏடிசி தொழிற்சங்கம், கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.10: கிருஷ்ணகிரியில், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் நிலையத்தில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் கூட்டு சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் நாகராஜ், ஓய்வு பெற்ற நலச்சங்கம் கணேசன், ஈஸ்வரன், ரெவா கூட்டமைப்பு மாநில கவுன்சில் உறுப்பினர் குணசேகரன், நகர பணிமனை செயலாளர் முருகன், தலைவர் அண்ணாதுரை, பொருளாளர் சதீஷ்குமார், புறநகர் பணிமனை செயலாளர் நாராயணன், தலைவர் சின்னபையன், பொருளாளர் சுந்தர், ஓய்வு பெற்ற நல அமைப்பின் தலைவர் செல்வராஜ், வழக்கறிஞர் பிரிவு பாஸ்கர், பாமக., தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மாதப்பன், மகேந்திரன், கோவிந்தராஜ், பாபு, சியாம், கோவிந்தன், குணசேகரன், கலைச்செல்வன் உள்பட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். இதேபோல், புறநகர் பணிமனை மற்றும் நகர பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post ஏடிசி தொழிற்சங்கம், கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : ATC union ,Krishnagiri ,Anna Transport Union ,Federation ,Tamil Nadu Government Transport Corporation ,
× RELATED கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில்...