- மேயர்
- நாகர்கோவில்
- நாகர்கோ, ஜனவரி
- நாகர்கோவில்
- மாநகர
- மேயர் மகேஷ்
- தம்மதுகோணம் ஞானம்
- காலனி
- 20 வது வார்டு
- தின மலர்
நாகர்கோவில், ஜன.10 : நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், 20 வது வார்டுக்குட்பட்ட தம்மத்துக்கோணம் ஞானம் காலனி பகுதியில் ஆய்வு செய்தார். அந்த பகுதியில் நடைபெற்று வரும் சாலைகள் மற்றும் கலையரங்கத்தை பார்வையிட்டார். அப்போது கலையரங்கத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் கூறினார். பின்னர் அங்கிருந்து 31வது வார்டுக்குட்பட்ட மேலராமன்புதூர் ரோடு சைமன்நகர் செலலும் சாலையில் அன்னை தெரசா தெருவில் உள்ள மழை நீர் வடிகால் ஓடையில் சிறு பாலம் அமைக்கும் இடத்தை பார்வையிட்டார். அந்த பகுதியில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் வடிகால்கள் சீரமைப்பு பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் என்று மேயர் உத்தரவிட்டார். மாநகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரணியம், நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார் மற்றும் கவுன்சிலர் அமல செல்வன், திமுக நிர்வாகிகள் எம்.ஜே.ராஜன், வட்ட செயலாளர் பாஸ்கர், டென்னிஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் 4 வது வார்டுக்கு உட்பட்ட கோயிலடிவிளை பகுதியில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் பணி, 8 வது வார்டுக்குட்பட்ட அருகுவிளை மேற்கு தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 49 வது வார்டுக்கு உட்பட்ட சி.டி.எம். புரம் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர் ஜவகர், உள்பட பலர் கலந்து கொண்டனர். 300 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் நாகர்கோவில் பெருவிளை மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.வி.டி. மேல்நிலைப்பள்ளியில் 300 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை மேயர் மகேஷ் வழங்கினார். இதில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post நாகர்கோவில் மாநகர பகுதியில் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகளை வேகமாக முடிக்க வேண்டும் மேயர் உத்தரவு appeared first on Dinakaran.