×

திண்டுக்கல் தாட்கோ மூலமாக தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், ஜன. 10: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு NTTF இன்ஸ்டிடியூட் வாயிலாக தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் எண்முறை உற்பத்தி துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு புகழ்பெற்ற தனியார் தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பெற பட்டயபடிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன்டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் முடித்த 18 முதல் 26 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான காலம் 6 மாதம், தங்கி பயில வசதி ஏற்படுத்தியும், இப்பயிற்சியினை முழுமையாக நிறைவு செய்பவர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC and NSDC Approval Certificate) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்கள் பட்டயபடிப்பு முடித்தவராக இருப்பின் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.16,000 முதல் ரூ.21,000 வரையும், பொறியில் பட்டப்படிப்பு முடித்தவராக இருப்பின் ரூ.21,000 முதல் ரூ.25,000 வரை பெறலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

The post திண்டுக்கல் தாட்கோ மூலமாக தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Dindigul TADCO ,Dindigul ,District ,Collector ,Poongodi ,Tamil ,Nadu ,Adi Dravidar Housing and Development Corporation ,TADCO ,Adi Dravidar ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...