×

நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல் உலக முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இருநாள் மாநாடு – 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இளைஞர்களும் – மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடுஎல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல் உலக முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய பாய்ச்சல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : World Investor Conference ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu Global Investors' Conference ,India ,Industry Minister ,D. R. B. ,World Investors Conference ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...