×

ஈரோட்டில் ஜவுளி ஆலை சட்டவிரோதமாக சாயக்கழிவுகளை மழை நீர் வடிகாலில் வெளியேற்றிய புகாரில் மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிப்பு


ஈரோடு: ஈரோட்டில் ஜவுளி ஆலையின் மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் தேவி திரெட்ஸ் என்ற ஜவுளி ஆலை சட்டவிரோதமாக சாயக்கழிவுகளை மழை நீர் வடிகாலில் வெளியேற்றிய புகாரில், அந்நிறுவனத்தின் மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுநீர் இஷ்டத்திற்கு வெளியேற்றப்படுவதாக கடந்த சில மாதங்களாக அதிகளவில் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் ஜவுளி நிறுவனம், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து கடந்த 16ஆம் தேதியன்று, சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் 2 நாட்கள் அங்கு ஆய்வு நடத்தி, கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதை உறுதி செய்தனர். பாயிண்ட் டெக்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் சட்ட விரோதமாக கழிவு நீரை சுத்திகரிக்காமல் பக்கவாட்டு சுவர் வழியே வெளியேற்றியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த ஜவுளி ஆலைக்கு மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் விதிமுறைகளை மீறிய புகாரில், 8வது ஆலை மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 மாதங்களில் பொதுமக்களின் புகாரின் பேரில் விதிகளை மீறிய 10க்கும் மேற்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜவுளி ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post ஈரோட்டில் ஜவுளி ஆலை சட்டவிரோதமாக சாயக்கழிவுகளை மழை நீர் வடிகாலில் வெளியேற்றிய புகாரில் மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Devi Threads ,Perundurai Chipkot Industrial Estate ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...