×

பானி பூரி

பூரி செய்ய தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப் அளவு
மைதா – 2 டேபிள் ஸ்பூன் அளவு
கோதுமை மாவு – 2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் – 1 ஸ்பூன்

பானி பூரி தண்ணீர் தயாரிக்க தேவையான பொருட்கள்:

புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
இஞ்சி துண்டு – 2
பச்சை மிளகாய் – 3
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
எலுமிச்சை பழத்தின் சாறு – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
சாட் மசாலா – 1 ஸ்பூன்
காராபூந்தி – 3/4 கப்

மசாலா தயார் செய்ய தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2
பச்சைப் பட்டாணி – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு ,
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
ஆம்சூர் பவுடர் – 3/4 ஸ்பூன்
சாட் மசாலா – 1
கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது – 1/2 கப்

செய்முறை:

ஒரு பவுலில் ரவையை எடுத்து அதனுடன் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கிளறவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள். இந்த மாவை சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் பானி பூரி அளவிற்கு சிறிய உருண்டைகளாக உருட்டி தேய்த்து எடுத்து எண்ணெய்யை காய வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

பானி பூரி தண்ணீர் தயாரிக்க…

கொத்தமல்லி, புதினா, இஞ்சி துண்டு, பச்சை மிளகாய் இவற்றை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு வடிகட்டியில் இந்த சாற்றை வடிகட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். இந்த தண்ணீருடன் தேவையான அளவு உப்பு, எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக காரத்திற்கேற்ப மிளகாய் தூள், சாட் மசாலா சேர்த்து நன்கு ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் காராபூந்தியை தூவி பானி பூரி தண்ணீரை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

மசாலா தயாரிக்க…

முதலில் உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை வேக வைத்து எடுத்து கொள்ளவும். இதனை சற்று மசித்து இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், சாட் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளவும் இறுதியாக கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி சேர்த்து கொண்டால் சுவையான மசாலா தயார்!

இப்போது தயார் நிலையில் உள்ள பானி பூரியை எடுத்து, அதனை மையத்தில் உடைத்து அதற்கும் மசாலா சேர்த்து பானி பூரி தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

The post பானி பூரி appeared first on Dinakaran.

Tags : Puri ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் பெண் வேட்பாளர் திடீர்...