×

ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதியில் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதியில் நாளை(10.01.2024) முதல் 350.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதியில் நிலையில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, 10.01.2024 முதல் 10.03.2024 முடிய 60 நாட்களில் 30 நாட்கள் தண்ணீர் திறப்பு என்ற அடிப்படையில் ஆழியாறு அணையிலிருந்து 350.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விடஅரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டம், ஆணை மலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கபட்டுள்ளது.

The post ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதியில் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Azhiyar old Ayakattu ,CHENNAI ,Water Resources Department ,Coimbatore District ,Anaimalai Circle ,Parambikulam Azhiyar Project ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...