×

கோடநாடு வழக்கு: தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது குஜராத் தடயவியல் குழு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்காக குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலை. குழு 26ல் தமிழகம் வருகை தருகிறது. சம்பவம் நடந்த 2017ல் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கைப்பற்றிய கேசட்டில் உள்ள தகவலை தரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 19 டவர்களில் பதிவான 60 செல்போன் எண்களின் உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று தகவலை தருவதற்காக தேசிய தடயவியல் குழு 26ல் திருச்சிக்கு வரவுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த சயான் 11ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

The post கோடநாடு வழக்கு: தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது குஜராத் தடயவியல் குழு..!! appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Tamil Nadu ,Nilgiris ,Gujarat National Forensic Laboratory University ,Kodanadu ,Trichy ,BSNL ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால்...