×

அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: சிஐடியு, அண்ணா தொழிற்சங்க பேரவை தகவல்

சென்னை: வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சிஐடியு பங்கேற்கும் என்று அ.சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரை தவிர மற்ற இடங்களில் பேருந்து சேவை 50% பாதிக்கப்பட்டுள்ளது என சிஐடியு தகவல் தெரிவித்துள்ளது. அரசு எப்போது அழைத்தாலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தயாராக உள்ளோம் என்று அண்ணா தொழிற்சங்க பேரவை தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.

The post அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: சிஐடியு, அண்ணா தொழிற்சங்க பேரவை தகவல் appeared first on Dinakaran.

Tags : CITU ,Anna trade union council ,CHENNAI ,A. Soundararajan ,Dinakaran ,
× RELATED சிஐடியு ஓட்டுநர் சங்க பேரவை கூட்டம்