×

இந்திய அளவில் தொழில்நுட்ப வல்லினர் போட்டியில் முதலிடம் பெற்ற பொறியியல் மாணவர்கள்

 

அரியலூர்,ஜன.9: இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹக்கத்தான் 2023 என்ற தலைப்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அகில இந்திய அளவில் தொழில்நுட்ப வல்லினர் போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம் கருப்பூரில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் அரியலூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். மேலும், ரூ.1 லட்சத்தை பரிசாக பெற்றனர். இதையடுத்து, இக்குழுவின் ஆண்டனி சுதன், கவுதம், காந்த், ஆதிரை, ரஞ்சிதா ஆகியோர் கல்லூரி முதல்வர் குமார் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

The post இந்திய அளவில் தொழில்நுட்ப வல்லினர் போட்டியில் முதலிடம் பெற்ற பொறியியல் மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : India ,Ariyalur ,Jaipur, Rajasthan ,Smart India Hackathon 2023 ,Indian Institute of Technical Education ,Tamil Nadu ,Karupur, Ariyalur ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...