×

சித்தளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

 

குன்னம்,ஜன.9: சித்தளி கிராமத்தில் குடிநீர்கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தளியில் கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை.

மேலும் அந்தபகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதாகவும் தேவையான அடிப்படை வசதிகள் அப்பகுதியில் எதுவும் இல்லை என்று சித்தளி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குன்னம் தாசில்தார், போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் சாமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு வாரத்திற்குள் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.

The post சித்தளி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Chithali ,Gunnam ,Sidthali ,Vepur panchayat ,Kunnam ,Perambalur district ,Dinakaran ,
× RELATED குன்னம் அருகே மகா மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்