×

வைகை அணையில் இருந்து 2,968 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்: ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு

 

மதுரை, ஜன. 9: வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீரால், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொரியாக சிம்மக்கல் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணை நவம்பரில் நிரம்பியது. இதையடுத்து, பாசனத்திற்காக 120 நாட்கள் வீதமும் ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கடந்த 6ம் தேதி அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து நேற்று முன்தினம் 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்வரத்து நேற்று காலை குறைந்ததால் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2,968 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் மதுரை, சிம்மக்கல் தரைப்பாலம் மூழ்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் தரைப்பாலத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அணையிலிருந்து ஏற்கனவே திறக்கப்பட்ட தண்ணீரால், பெரியாறு – வைகை வடிநில கோட்டத்தின் கீழ் உள்ள 19 கண்மாய்களில், 10 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள கண்மாய்களை நிரப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்,’’ என்றனர். மதுரையில் தரைப்பாலத்தை ஒட்டிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

The post வைகை அணையில் இருந்து 2,968 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்: ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Madurai ,Vaigai river ,Madurai district ,Vaigai dam ,Simmakkal ,Andipatti, Theni district ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்