×

கன மழை, முகூர்த்த நாள் இல்லாததால் கோயம்பேட்டில் பூக்கள் விலை சரிவு

அண்ணாநகர், ஜன.9: கனமழை காரணமாக, கோயம்பேட்டில் பூக்கள் விலை சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் திண்டுக்கல், ஒசூர், மதுரை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வருகின்றன. கடந்த ஒரு வாரமாக அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அப்போது ஒரு கிலோ மல்லி ₹2,300, ஐஸ் மல்லி ₹1,800, முல்லை, கனகாம்பரம் ₹1,200, ஜாதிமல்லி ₹900, அரளி பூ ₹350, சாமந்தி ₹100, சம்பங்கி ₹250, பன்னீர்ரோஸ் ₹140, சாக்லேட் ரோஸ் ₹160 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்துவரும் தொடர் கனமழை மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் நேற்று அனைத்து பூக்களின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ₹1,100, ஐஸ் மல்லி ₹1,000, கனகாம்பரம் ₹600, முல்லை ₹500, ஜாதிமல்லி ₹300, அரளி பூ 150, சாமந்தி ₹20, சம்பங்கி ₹60, பன்னீர் ரோஸ் ₹30, சாக்லேட் ரோஸ் ₹50க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் தொடர்ந்து விலை உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் இரவில் இருந்து தொடர் கனமழை பெய்து வருவதாலும், முகூர்த்த நாள் இல்லாததாலும் அனைத்து பூக்களின் விலையும் குறைந்துள்ளது. மழை நீடித்தால் மீண்டும் பூக்களின் விலை குறையும். தை பொங்கலை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் மீண்டும் உயரும்,’’ என தெரிவித்தார்.

The post கன மழை, முகூர்த்த நாள் இல்லாததால் கோயம்பேட்டில் பூக்கள் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Annanagar ,Chennai Koyambedu ,Market ,Dindigul ,Hosur ,Madurai ,Kanchipuram ,Chengalpattu ,Tiruvallur ,Andhra Pradesh ,Karnataka ,Tamil Nadu ,Mugurtha day ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...