×

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், ஜன. 9: திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையினை பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து 5 வருடங்களும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வருடமும் போதுமானது. உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற தகுதியுள்ள விருப்பமுள்ள பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம், (அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நீங்கலாக) முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து வருகிற பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அளித்து வேலைவாய்ப்பற்றோருக்கான இளைஞர் உதவித்தொகையினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tiruvallur District Employment and Vocational Guidance Centre ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...