×

கீழ்பென்னாத்தூரில் அதிகபட்சமாக 53 மி.மீ மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக பெய்தது

திருவண்ணாமலை, ஜன.9: திருவண்ணாமலை மாவட்டத்தில், பரவலான கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 53 மிமீ மழை பதிவானது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடிப்பதாலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை முதல் மிதமான கனமழை வரை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி, தொடர்ந்து விட்டு விட்டு பரவலான கன மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் லேசான மழை நீடித்தது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.

இந்நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 53 மிமீ மழை பதிவானது. அதேபோல், திருவண்ணாமலையில் 11 மிமீ, செங்கத்தில் 4.80 மிமீ, போளூரில் 10.20 மிமீ, ஜமுனாமரத்தூரில் 6 மிமீ, கலசபாக்கத்தில் 12 மிமீ, தண்டராம்பட்டில் 24.40 மிமீ, ஆரணியில் 17 மிமீ, செய்யாறில் 20 மிமீ, வந்தவாசியில் 40 மிமீ, வெம்பாக்கத்தில் 15 மிமீ, சேத்துப்பட்டில் 27.60 மிமீ மழை பதிவானது. திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்ளில், இன்றும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கழி மாத கடும் குளிரும், மழையும் இணைந்த சூழ்நிலையால், பகலிலும் மழையுடன் சேர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post கீழ்பென்னாத்தூரில் அதிகபட்சமாக 53 மி.மீ மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக பெய்தது appeared first on Dinakaran.

Tags : Kilipennathur ,Tiruvannamalai ,Tiruvannamalai district ,Tamil Nadu ,Valli Zone ,Northeast Monsoon ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...