×

குழந்தைகள் விளையாடுவதில் மோதல்; 2 வாலிபர்கள் கைது

 

திருப்பூர், ஜன.9: திருப்பூர் நெரிப்பெரிச்சல் அடுத்த வாவிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவருடைய மனைவி முத்துமாரி (26). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் வினோத்குமார் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு அருகாமை வீட்டு குழந்தையுடன் வினோத்குமாரின் குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது விளையாடுவதில் குழந்தைகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த குழந்தையின் மாமா ஜெயபிரகாஷ் (24) வினோத்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து ஜெயபிரகாஷ் தனது நண்பர்களான வெங்கடேஷ் (26), சாரதி (28) ஆகியோரை அழைத்து வந்து வினோத்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கைக்கலப்பாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து, இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த வினோத்குமார் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரகாஷ், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சாரதியை தேடி வருகின்றனர்.

The post குழந்தைகள் விளையாடுவதில் மோதல்; 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Vinod Kumar ,Vavipalayam ,Muthumari ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்