×

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்: நமது கதையை நாமே செதுக்குவோம்; – ஆனந்த் மகேந்திரா

உலக முதலீட்டாளர் மாநாட்டில் மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா கூறியதாவது: தமிழகத்தில் கல்வி, கடவுளாக, கோயிலாகப் பார்க்கப்படுகிறது. கல்வி கற்றாலே இங்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. உதகையில் உள்ள அரசுப் பள்ளியை பார்வையிட்ட போது இதனை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டேன். மனித அறிவை மட்டுமே நான் நம்புவேன். நமது அனுபவத்தால் மட்டுமே அறிவு வளர்ச்சி பெறும். நம்முடைய அனுபவத்தால் கிடைக்கும் அறிவைப் பயன்படுத்தினால், நம்முடைய செயல்பாடுகள், பேச்சில் மிகுந்த வித்தியாசம் தெரியும். நமது கதையை நாமே செதுக்குவோம். செயற்கை நுண்ணறிவு பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது தரவுகளை சேகரிக்கும் மிகப்பெரிய அமைப்பாகக் கூறுகிறார்கள். வாழ்க்கை, உண்மை போன்றவை தரவுகளைச் சார்ந்தது இல்லை. உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உங்களுக்கான கதை. எனவே நாம்தான் நமது கதைகளை எழுதுகிறோம். தகுதியான மனிதவளம் இங்கே இருக்கிறது. அரசியல் தலைமைகள் மாறினாலும், மிகச்சிறந்த அதிகாரிகள் மாநிலத்துக்காக பணியாற்றுகிறார்கள். அதற்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழ்நாடு அரசுக்கு விவோ இந்தியா செல்போன் தயாரிப்பு நிறுவன தலைவர் பாராட்டு
விவோ இந்தியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் இஸ்ரார் அகமத் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : தமிழ்நாட்டில் இதுபோன்ற மாநாடு வைத்துள்ளது மிகப்பெரிய விஷயம். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டை சேர்ந்த நுகர்வோர்கள் வந்துள்ளனர். 350க்கும் மேற்பட்ட ஏற்றுமதி, நுகர்வோர் மற்றும் முதலீடுகளை செய்வதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில் 150 நபர்கள் முதல்முறையாக ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. பிற மாநிலங்களில் பெரிய நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையில் சிறு, குறு நடுத்தர தொழில்துறைக்கு தமிழ்நாடு அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது பாராட்டுக்குரியது. சிறு, குறு நடுத்தர தொழில்முனைவோர் உதவும் பெரிய நிறுவனத்திற்கு முக்கியமானது. மேலும் இந்த மாநாடு மூலம் 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார்.

* அதானி குழுமம் ரூ.42,000 கோடி முதலீடு
2வது நாளான தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இதில் அதானி குழுமத்தின் 4 நிறுவனங்கள் ரூ.42,768 கோடிக்கு முதலீடு செய்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 10,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதானி பசுமை ஆற்றல் நிறுவனம் ரூ.24500 கோடியில் 4000 பேருக்கு வேலைவாய்ப்புகள், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலம் ரூ.3500 கோடியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்புகள், அதானி கனெக்ஸ் ரூ.13200 கோடியில் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் அதானி பசுமை எரிசக்தி நிறுவனம் மூலம் ரூ.1568 கோடியில் 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

* கொமஸ்ட்சு Hybrid excavator இயந்திரம்
கடந்த மே மாதம் ஜப்பான் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கொமஸ்டே என்ற நிறுவனத்தை பார்வையிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக கொமஸ்ட்சு நிறுவனத்தின் Hybrid excavator உலக முதலீட்டாளர் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கொமஸ்ட்சு சென்னை நிறுவனத்தின் விஜிப் கூறியதாவது: கொமஸ்ட்சுவின் முதல் Hybrid excavator இயந்திரம் இங்குதான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறுகளை தூய்மைப்படுத்தலாம். 2023ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் உள்ள நிறுவனத்தை பார்வையிட்டார். மேலும் இந்த இயந்திரம் தமிழ்நாட்டின் எக்ஸ்னோரா தன்னார்வ தொண்டு நிறுனத்திற்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘state of art’ மையங்களாக மாற்றமடையும் தமிழ்நாடு ஐடிஐ நிறுவனங்கள்
தமிழ்நாடு அரசு ஐடிஐ நிறுவனங்கள் ‘state of art’ மையங்களாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறது. அதன்படி டாடா நிறுவனத்திடமிருந்து ரூ.2800 கோடியில் state of art ஐடிஐ மையங்களை அமைத்து வருகிறது. அந்த மையங்களில் தொழில்துறை 4.0க்கு இணையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அரங்கு உலக முதலீட்டாளர் மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரோபோடு வெல்டிங் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. முழுவதும் ஆட்டோமேட்டிங்காக இயங்கக்கூடிய வகையில் இந்த கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட் மையங்களை state of art ஐடிஐ மையங்கள் என்று அழைக்கப்படும் 70க்கும் மேற்பட்ட ஐடிஐகளில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மாணவர்களுக்கு அதிநவீன பயிற்சிகளை அளிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைய உள்ள தொழில் நிறுவனங்களின் விவரம்
நிறுவனங்கள் பெயர் முதலீடு செய்யும் மாவட்டம் தொழில் பெயர் முதலீடு மதிப்பு வேலைவாய்ப்பு
ஹைலி குளோரி புட்வேர் கள்ளக்குறிச்சி தோல் அல்லாத காலணி ரூ.2,302 கோடி 20000
ஜியாங் பெரம்பலூர் தோல் அல்லாத காலணி ரூ.48 கோடி 150
பெங் டாய் விழுப்புரம் குரோஸ் தோல் அல்லாத காலணி ரூ.500 கோடி 6000
சி.பி.சி.எல். நாகப்பட்டினம் பெட்ரோ கெமிக்கல் ரூ.17000 கோடி 2,400
கிட்டாச்சி எனர்ஜி சென்னை குளோபல்
கேபபிளிட்டி சென்டர் ரூ.100 கோடி 1,500
மஹிந்திரா நிறுவனம் திருவள்ளூர்
உள்ளிட்ட சில இடம் தொழில் பூங்கா ரூ.1,800 கோடி 4000
எல் அண்டு டி சென்னை ஐ.டி. பூங்கா ரூ.3,500 கோடி 4000
காவேரி மருத்துவமனை சில மாவட்டம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ.1,200 கோடி 7,500
ராயல் என்பீல்டு காஞ்சிபுரம் ஆட்டோ மொபைல் ரூ.3000 கோடி 2000
ஸ்டெல்லாண்டிஸ் குரூப் திருவள்ளூர் மின்சார கார் ரூ.2000 கோடி –
டாப்பே சென்னை ஆட்டோமேட்டிக்
உற்பத்திஅலகு ரூ.500 கோடி 1000
அசோக் லேலாண்ட் – ஆட்டோமொபைல் ரூ.2500 கோடி 300
மைக்ரோசாப்ட் இந்தியா சென்னை டேட்டா சென்டர் ரூ.2740 கோடி 160
டாடாகெமிக்கல்ஸ் ராமநாதபுரம் கெமிக்கல் உற்பத்தி ரூ.1000 கோடி 500
கேப்லின் பாயிண்ட் – மருந்து உற்பத்தி ரூ.700 கோடி 1500
டாட்டா பவர்
ரினிவபுள் எனர்ஜி பல்வேறு மாவட்டம் ரினிவபுள் எனர்ஜி ரூ.70800 கோடி 3800
ஜாம்இன்ப்பிரா திருச்சி ஏரோஸ்பேஸ் ரூ.1000 கோடி 800
ராமகிருஷ்ணா
டிடாகர் ரயில் வீல்ஸ் திருவள்ளூர் ரயில் சக்கரம் ரூ.1850 கோடி 1400
பெஸ்டோஇந்தியா கிருஷ்ணகிரி பெனியூமேட்டிக்ஸ் ரூ.520கோடி 2000
பேனக்இந்தியா திருவள்ளூர் ரோபோட் ரூ.55கோடி 75
ராம்ராஜ் பல்வேறு மாவட்டம் ஜவுளி ரூ.1000 கோடி 13000
சகி எக்ஸ்போ பல்வேறு மாவட்டம் ஜவுளி ரூ.1000 கோடி 22000
அதானி குரூப் – கேஸ்-சிஎன்ஜி ரூ.1568 300
அதானி குரூப் – கானக்ஸ் ரூ.13200 கோடி 1000
அதானி குரூப் – அம்புஜா சிமெண்ட் ரூ.3500 கோடி 5000
அதானி குரூப் – கிரீன்எனர்ஜி ரூ.23200 கோடி 4000
ஷெல் மார்க்கெட் இந்தியா பல்வேறு மாவட்டம் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி ரூ.1070கோடி 50000

The post உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்: நமது கதையை நாமே செதுக்குவோம்; – ஆனந்த் மகேந்திரா appeared first on Dinakaran.

Tags : World Investors Conference ,Anand Mahendra ,Mahindra Group ,World Investor Conference ,Tamil Nadu ,Utkai ,Carve Our Own Story ,
× RELATED உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்,...