×

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.20,000 கோடிக்கு சிஎம்டிஏவுடன் ஒப்பந்தம்: கிரெடாய் அறிவிப்பு

சென்னை: கிரெடாய் வெளியிட்ட அறிக்கை: 33 நபர்களை கொண்ட ரியல் எஸ்டேட் அசோசியேசன்-சிஎம்டிஏவுடன் ரூ.20 ஆயிரம் கோடிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேற்று புரிந்தணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு திட்டத்திற்கு என்னென்றும் ரியல் எஸ்டேட் அசோசியேசன் உதவியாக இருக்கும். மேலும் தொழிற்சாலை பங்குதாரர்கள் அரசுடன் இணைந்து தொழில் செய்தவற்கான சூழலை உருவாக்க உதவியாக இருக்க வேண்டும். சிஆர்இடிஏஐ உறுப்பினர்கள் சிலர் ரூ.1500 கோடி முதல் ரூ.2100 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இது ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

* நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி வேலையில்லா திண்டாட்டம் குறையும்
மாநாட்டில் முதலீட்டாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, பொருளாதார அறிஞர் ரகுராம்ராஜன் அளித்த பதில்: வேலையில்லாதவர்கள், இருக்கும் பணிகளை பெறுவதற்கு போதுமான திறனின்றி உள்ளனர். எனவே அவர்களுக்கு போதுமான திறனை பயிற்சி அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக தான் நான் முதல்வன் திட்டம் உள்ளது. இத்திட்டம் மூலம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதால் சந்தைக்கு தேவைப்படும் பணியாளர்கள் கிடைப்பதோடு, வேலையில்லா திண்டாட்டமும் குறையும் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

The post உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.20,000 கோடிக்கு சிஎம்டிஏவுடன் ஒப்பந்தம்: கிரெடாய் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CMDA ,World Investors Conference ,Creditay ,Chennai ,Real Estate Association ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ₹12 கோடியில் நவீனமயமாகிறது அம்பத்தூர்...