×

வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு 174 எம்எஸ்எம்இ நிறுவனங்களிடம் இருந்து 50.70 லட்சம் அமெரிக்க டாலருக்கு கொள்முதல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர், ஸ்பெயின், கென்யா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், எம்எஸ்எம்இ தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாய பெருமக்களுக்கு உதவிடும் வகையில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய வேளாண் பெரு வழித்தடம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டமானது, 5 ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில், ரூ.1170 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் நடத்தப்படும் இந்த வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பின் போது, ​​174 எம்எஸ்எம்இ நிறுவனங்களிடமிருந்து 50.70 லட்சம் அமெரிக்க டாலருக்கு கொள்முதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 19.55 லட்சம் அமெரிக்க டாலர்கள் 73 புதிய முதல்முறை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் இஸ்ரார் அகமது, தொழில் துறையின் செயலர் வி.அருண்ராய், எம்எஸ்எம்இ துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், சிட்கோ மேலாண்மை இயக்குநர் மதுமதி, தொழில் வணிக ஆணையர் நிர்மல் ராஜ், கூடுதல் தொழில் வணிக ஆணையர் கிரேஸ் பச்சோவ், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் ஹபீப் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு 174 எம்எஸ்எம்இ நிறுவனங்களிடம் இருந்து 50.70 லட்சம் அமெரிக்க டாலருக்கு கொள்முதல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo Anparasan ,CHENNAI ,Global Investors Conference ,Australia ,Japan ,Italy ,Singapore ,Spain ,Kenya ,Minister Thamo Anparasan… ,Minister Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...