- கபாலீஸ்வரர் கர்பகம்பால்
- மயிலாப்பூர்
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- சேகர்பாபு
- சென்னை மண்டல கோயில்கள்
- கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபம்
- இந்து மதம் மகளிர் அறக்கட்டளை துறை
- மகா சிவராத்திரி
சென்னை: சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில், ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல் மகாசிவராத்திரி பெருவிழா, நவராத்திரி விழா, பவுர்ணமி திருவிளக்கு பூஜை, ஐயப்பன் மலர் வழிபாடு போன்ற சிறப்பு வழிபாடுகளும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டிற்கான ஐயப்பன் மலர் வழிபாடு இன்று மாலை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் ஆன்மிக சான்றோர்கள் மற்றும் இறையன்பர்களின் பங்கேற்புடன் நடைபெற உள்ளது. இதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு சென்று வந்த 108 குருசாமிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, ஐயப்பன் உருவம் பொறித்த வெள்ளி டாலருடன் கூடிய துளசி மாலையை வழங்குகிறார். தொடர்ந்து, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையும், கலைமாமணி வீரமணியின் இசை வாரிசு வீரமணிகண்ணன் கோடீஸ்வரன் குழுவினரின் ஐயப்பன் பக்தி பாடல்களும், வைஷ்ணவி சுகுமார் குழுவினரின் ஐயப்ப சரித்திரம் என்ற நாட்டிய நாடகமும் நடக்கிறது. அன்னதானமும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்களும், இறையன்பர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் ஐயப்பன் மலர் வழிபாடு நிகழ்ச்சி: அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.