×

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முதல்வர் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முதல்வர் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: பொங்கல் திருநாளுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. வரும் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்குவர். அத்தகைய தருணத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றால் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதுமே தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டு விட்டன.  தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்த சிக்கலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும். அவரே தொழிற்சங்க பிரதிநிதிகளை நேரடியாக அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை நிறைவேற்றி வேலைநிறுத்தத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.

The post போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முதல்வர் நேரடியாக பேச்சு நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CM ,Anbumani ,CHENNAI ,Chief Minister ,BAMK ,Pongal festival ,
× RELATED காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை...