×

புனே மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், புனே மக்களவை தொகுதி எம்பி கிரிஷ் பாபட் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதியின் எம்பி பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் உடனடியாக தேர்தல் நடத்தக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புனே மக்களவை தொகுதி இடைத்தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. விரைவில் மக்களவை பொது தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து உச்ச நிதிமன்ற நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

The post புனே மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,New Delhi ,Girish Bapat ,Pune ,Maharashtra ,Bombay High Court ,Pune Lok Sabha ,Dinakaran ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு