×

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா கமாண்டர் பலி

பெய்ரூட்: இஸ்ரேலுக்கும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானம் பெய்ரூட் குடியிருப்பு மீது நடத்திய தாக்குதலில்,ஹமாஸ் துணை தளபதி சலே அல் அரூரியும் அவரது பாதுகாவலர்கள் 6 பேரும் உயிரிழந்தனர். அரூரியை கொன்றவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது. அதன் படி இஸ்ரேலின் மெரோன் விமான கட்டுப்பாட்டு தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

ஏவுகணை தாக்குதலால் விமான ஓடு பாதை சேதம் அடைந்தது என்றும் மெரோன் வான் கட்டுப்பாட்டு தளத்தில் இருந்து இஸ்ரேலிய விமானப்படையால் போர் விமானங்களை இயக்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியது. இந்நிலையில், தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் இடங்களின் மீது இஸ்ரேல் விமான படை நேற்று குண்டுகளை வீசியது. இந்த குண்டு வீச்சு குறித்து லெபனான் பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், ‘‘ ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு பிரிவான ராட்வான் படையின் மூத்த தளபதி ஒருவர் கிர்பெட் செல்ம் என்ற கிராமத்துக்கு காரில் சென்றார். அப்போது இஸ்ரேல் குண்டுவீச்சில் அவர் பலியானார்’’ என்றார்.

The post லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா கமாண்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Hezbollah ,Israel ,BEIRUT ,Lebanon ,Hamas ,Saleh al-Aruri ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...