×

லாரி மீது வேன் மோதி கோவையை சேர்ந்த 11 பக்தர்கள் காயம்: பவானி அருகே இன்று பரபரப்பு

பவானி: பவானி அருகே இன்று காலை லாரி மீது வேன் மோதிய விபத்தில் கோவையை சேர்ந்த 11 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து 18 பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு மாலை அணிந்து சென்றனர். கோவிலில் இருமுடி செலுத்தி விட்டு இன்று அதிகாலை வேனில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர்.

சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த பச்சபாளிமேடு அருகே சென்றபோது, டிரைவர் கண்யர்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன், முன்னால் சென்ற பழைய இரும்பு பொருட்கள் ஏற்றுச்சென்ற லாரி மீது மோதியது. இதில், வேனில் வந்த 9 பெண்கள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மீது வேன் மோதி கோவையை சேர்ந்த 11 பக்தர்கள் காயம்: பவானி அருகே இன்று பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Goa ,Bhavani ,Malmaruvathur Adiprashakti Temple ,
× RELATED பவானி ஆற்றினை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்