×

10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடி: கி.வீரமணி சாடல்

சென்னை: 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடி என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 10% இடஒத்துக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடுவதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடி என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறு என்பதும் விளங்கிவிட்டது. கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் வரக்கூடியது; அதை புறக்கணித்து ஒன்றிய அரசு அவசர அவசரமாக சட்டத்தை நிறைவேற்றியது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டத்தை அவசரமாக ஒன்றிய அரசு நிறைவேற்றியது. தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் சட்டத்தை செயல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, மாநில உரிமைகளை தன் விருப்பம் போல் பறிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடி என்று அவர் கூறியுள்ளார்.

 

The post 10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றிய அரசின் செயல்பாட்டுக்கு மரண அடி: கி.வீரமணி சாடல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union Government ,K. Veeramani Chatal ,Chennai ,Dravida Kazhagam ,president ,K. Veeramani ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு...