×

சிறுகதை அதிகப்பிரசங்கி

நன்றி குங்குமம் தோழி

சில்லென்று வீசிய குளிர் காற்றுக்கு வித்யாவின் உடல் நடுக்கம் கொண்டது.
‘‘குளிருதா வித்யா? ஸ்வெட்டர் எடுத்துப் போட்டுக்கோ. வா!
ஃபேன் காத்து அதிகம் வீசாத இடத்துல போய் உட்காந்துப்போம்.’’

அந்தப் பெரிய மருத்துவமனையின் ரிசப்ஷன் ஹாலில்! மக்களின் கூட்டம் அலை மோதியது. நாட்டில் நோயாளி
களின் எண்ணிக்கையை விட அவர்களை பார்க்க வரும் உறவுகளின் எண்ணிக்கை தான் அதிகமாய் இருந்தது.
‘‘வித்யா இந்த ஹாஸ்பிடல் பெருசா இருக்கே? இங்க எல்லா நோய்க்கும் மருத்துவம் பார்ப்பாங்களா?’’

‘‘ம்! பார்ப்பாங்கம்மா? ஆனா, நம்மக் கிட்ட பணம் மட்டும் நிறைய இருக்கனும். இவங்க ட்ரீட்மென்ட்ல நாம குணமாகறது நிச்சயம்’’.
‘‘அவ்வளவு பணம் வாங்கப் போய் தான் இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல கட்ட முடியுது. எப்படியோ செலவுப் பண்ற காசுக்கு உயிரக் காப்பாத்துறாங்களே… நல்லதுதான். நம்மக்கிட்ட பணம் இருந்திருந்தா அன்னைக்கே உங்க அப்பாவ காப்பாத்தியிருக்கலாம். அநியாயமா அவர் உயிர் போய்டுச்சு?’’
‘‘ம்!’’‘‘இங்க இலவசமா பார்க்க மாட்டாங்களா?’’
‘‘அதுவும் இருக்கு? இலவசம்னா
அதோ அந்த இடத்துல போய் டோக்கன் போடணும்?’’

‘‘இங்க எல்லோரும் முழுகாம இருக்கற பொண்ணுங்களா உட்காந்திருக்காங்களே. அப்போ மத்த கேஸ் எல்லா எங்க வெச்சுப் பார்ப்பாங்க?’’
‘‘அம்மா இது மாசமான பெண்கள செக் அப் பண்ணி ட்ரீட்மென்ட் குடுக்கற இடம்? டெலிவரி பார்க்க வேற இடம் இருக்கு?’’
‘‘நான் வேணா போய் சுத்திப் பாத்துட்டு வரட்டா?’’‘‘இதென்ன பார்க்கா? சுத்திப் பாக்கறதுக்கு? பேசாம உட்காருங்க?’’

‘‘கிராமத்துல இருக்கற சுகாதார மையத்த தவிர, இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல நான் பார்த்ததில்லடி! நீ உட்காரு நான் போய் பாத்துட்டு வரேன்.’’
‘‘அம்மா பேசாம உட்காரு… செக்யூரிட்டி பார்த்தா திட்டுவாங்க? ஏற்கனவே கண்ட வைரஸ் பரவிக்கிட்டு இருக்கு, நீ போய் எதையாவது புடிச்சிட்டு வந்துடாத?’’
‘‘எவ்வளவு நேரம்தான் நானும் உட்காருவேன்.

போரடிக்குது? டி.வில சவுண்டே இல்லாம நல்லா பாட்டு ஓடுது… கொஞ்சம் சவுண்டயாவது வெச்சா நல்லாருக்கும். இங்க டீ, காபி எல்லா கிடைக்குமா?’’ வித்யா கண்களை இறுக மூடிக் கொண்டாள். என்னென்னவோ நினைவுகள் மனதில் தோன்றி மறைந்தன. இரண்டாவது பிரசவம்தான் என்றாலும் மனதில் ஏதோ ஒரு பயம். அம்மாவை திரும்பிப் பார்த்தாள். டிவியில் கண்ணாக இருந்தாள். பேசப் போய் திரும்ப தொண தொணக்க ஆரம்பித்து விட்டாள்? அமைதியானாள் வித்யா. பேச்சுக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம் என்ற பயம்.

‘‘டோக்கன் நம்பர் பத்து?’’ குரல் கேட்டு எழுந்தாள்.‘‘அம்மா இங்கயே உட்காருங்க நான் போய் டாக்டர பாத்துட்டு வரேன்…’’ சொல்லிவிட்டு விடு விடு என நடக்கும் மகளை அதட்டினாள் சாரதா.‘‘வயித்துல குழந்தையோட இப்படியா வேகமா நடக்கறது? மெதுவா போ? ஆத்திரம், அவசரம் எப்பயும் உடம்புக்கு ஆகாது?’’
‘‘பேசனது போதும் டாக்டர் வெயிட் பண்றாரு? சீக்கிரம் போம்மா?’’ என்ற நர்ஸை முறைத்தாள்.

‘‘அதுக்கு முதல்லயே கூப்ட்டிருந்தா மெதுவா வந்திருப்போம் இல்ல? இப்ப அவசரப்படுத்திக்கிட்டு?’’ என்றாள்
எரிச்சலோடு.‘‘ஹாஸ்பிடல்னா அப்படித்தான் இருக்கும். வெத்தல பாக்கு எல்லாம் வெச்சு அழைக்க முடியாது. ஒரு டோக்கன் போனா அடுத்த டோக்கன் தானா வந்து நிக்கணும் தெரியுதா’’ என்றாள் கோவமாக.‘‘தெரியாது? நான் இன்னிக்குத்தான் புதுசா வந்திருக்கேன்?’’ பட்டென்று
சொன்னாள்.‘‘வித்யா கூட வந்தது யாருங்க? உள்ள வாங்க? டாக்டர் கூப்டறாங்க?’’

‘‘உட்காருங்கம்மா நைட்டுக்குள்ள பிரசவம் ஆய்டும்… அட்மிட் பண்ணிடுங்க? சரி நீங்க போய் வெயிட் பண்ணுங்க?’’ என்றார் மெதுவான குரலில்.
சாரதா வீட்டுக்கு போன் செய்து தகவலை சொல்லியிருந்தாள். ‘‘வித்யாக்கு நைட்டுக்குள்ள டெலிவரி ஆய்டும்னு சொல்லிட்டாங்க? நீங்க வந்துடுங்க ரூம் நம்பர் பத்து சரிங்க!! போன கட்
பண்ணிக்கிறேன்.’’ ‘‘வித்யா மாப்பிள்ளைக்கு தகவல் சொல்லிட்டேன். வா நாம பத்தாவது ரூமுக்கு போகலாம்.’’

‘‘இரும்மா சிஸ்டர் வந்து நம்மள கூட்டிட்டுப் போவாங்க?’’

‘‘நீ இப்படி உட்காரு? வித்யா மாப்பிள்ளைய சாப்பாடு கொண்டு வர சொல்லட்டா?’’
‘‘வேண்டாம்மா எல்லாம்
இங்கயே கிடைக்கும்…’’
‘‘அப்படியா நல்லதா போச்சு உனக்கு டெலிவரிக்கு அப்புறம் சாப்ட…’’
‘‘இங்கயே பத்திய சாப்பாடு குடுத்துடுவாங்க?’’
துளித்துளியாய் ட்ரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது. இடுப்பு லேசாய் வலித்தது. தண்ணி மட்டும் வேணும்னா கொஞ்சம் குடிச்சிக்கோங்க. அப்புறம்
எனிமா குடுத்துக்கலாம்.

‘‘புள்ளைக்குப் பசிக்காதா?’’
‘‘பசிக்காம இருக்கத்தான் ட்ரிப்ஸ் போட்ருக்கோம்? சரிம்மா, ஏதாவது வேணும்னா கூப்டுங்க? முன்னாடி சிஸ்டர்ஸ்
இருப்பாங்க…’’ சொல்லிவிட்டு சென்றனர்.

‘‘ஏண்டி உம்முன்னே இருக்க?’’
‘‘பயமா இருக்கு?’’
‘‘ஏற்கனவே ஒரு புள்ளைய பெத்துட்ட அப்புறம் என்ன பயம்? சரி, திரும்ப உன்ன செக் பண்ண வராங்க… நான் கொஞ்ச நேரம் வெளிய நிக்கிறேன்.’’
‘‘ம்!’’

‘‘வித்யா குழந்தையோட ஹாட் பீட் நல்லா இருக்கு. குழந்தை இறங்கி வருது… சீக்கிரம் டெலிவரி ஆய்டும்…’’
‘‘ம்!’’
‘‘உன் கூட இருக்கறது யாரு… உங்க
அக்காவா?’’
‘‘இல்ல அம்மா…’’

‘‘ஓ நல்லா ஆக்டிவ்வா இருக்காங்க. நல்ல பேஸ்கட். சிரிச்ச முகமா இருக்காங்க. சரி ரெஸ்ட் எடுங்க…’’ வெளியே வந்தனர்.‘‘வித்யா அம்மா இங்க வாங்க உங்கப் பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்காங்க… போய் தைரியம் சொல்லுங்க? பிரசவ பயமா இருக்கும்.’’‘‘எனக்கு இவளோட ஆறு குழந்தைங்க… எல்லாமே சுகப்பிரசவம். நான் பெத்ததுலயே இவ தான் பயந்தாங்கொள்ளி… எவ்வளவு சொன்னாலும் தைரியம் வராது. முதல் பிரசவத்துக்கே பயந்து நடுங்குனா. ரெண்டாவதுக்காவது தைரியம் வேண்டாமா?’’
‘‘உங்க வீட்டுக்காரர் என்ன பண்றாரு?’’‘‘விவசாயம்தான்… இப்ப அவர் இல்ல தவறிட்டாரு…’’
‘‘என்னாச்சு?’’‘‘வயல்ல வேலை செய்றப்போ பாம்புக் கடிச்சிடுச்சு? சரியான நேரத்துல ஹாஸ்பிடல் கொண்டு போக முடியில… சின்ன வயசுலயே

தவறிட்டாரு.’’
‘‘அடப்பாவமே…’’
பரிதாபப்பட்டனர்.

‘‘அம்மா எங்க பரத்..?’’
‘‘சாப்டப் போயிருக்காங்க வித்யா. காலைல இருந்து சாப்டலியாமே?’’
‘‘நீங்க சாப்டலியா?’’
‘‘சாப்ட்டுதான் வந்தேன்… உங்க அம்மா தனியா போய்ட்டு வந்துடுவாங்கலா?’’
‘‘அதெல்லாம் விசாரிச்சிட்டு வந்துடுவாங்க?’’ ஒரு மணி நேரத்துக்குப் பின்
நிதானமாக வந்தாள்.
‘‘இவ்வளவு நேரமா எங்க அத்த போனீங்க?’’
‘‘பக்கத்து ரூம்ல ஒரு சின்னப் பொண்ணு அட்மிட் ஆகி இருக்கு? கூட வேற யாரும் இல்ல… அதான் அவங்களுக்கு சாப்பாடு வாங்கி குடுத்துட்டு வந்தேன் மாப்பிள்ள… இப்ப உனக்கு வலி எப்படி இருக்கு வித்யா.’’‘‘ம்! அதிகப்பிரசங்கி…’’ உதட்டுக்குள் முணங்கினான். கொஞ்ச நேரத்தில் வலி அதிகமாகி இருந்தது. பிரசவ வார்டுக்குள் கொண்டு போயிருந்தனர். வித்யாவின் கத்தல் கேட்டது. குழந்தையின் வீல் என்ற அழுகுரலோடு தாயின் சத்தம் குறைந்தது.

‘‘பெண் குழந்தை பிறந்திருக்கு. குழந்தை நல்லாருக்கு. நீங்க ரிசப்ஷன் ஹால்ல வெயிட் பண்ணுங்க கூப்டறோம்…’’
தொட்டிலில் தங்க விக்கிரமாய் குழந்தை. அம்மா கொஞ்சிக் கொண்டிருந்தாள். ‘‘வித்யா குழந்தைய உன் பக்கம் போடுறேன்… ரெண்டு பேரும் தூங்குங்க… மாப்பிள்ள பொண்டாட்டி, புள்ளய
கவனிச்சிக்கோங்க. இப்ப வரேன்…’’
‘‘எங்கப் போறாங்க உங்க அம்மா?’
‘‘எங்க அம்மா உலகம் சுற்றும் வாலிபி. அவங்கள கட்டிப் போட முடியாது…’’
‘‘அதிகப்பிரசங்கி’’ முணுமுணுத்தான்.

வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஓடி விட்டது. ஷ்யாம் வேலைக்கு சென்றிருந்தான். சாரதா ஊருக்கு கிளம்பியிருந்தாள். ‘‘வித்யா நான் கிளம்பறேண்டி… அங்க
மாடு, கன்னு எல்லாம் கவனிக்க ஆள் இல்லாம இருக்கு. உங்க தாத்தாவால அத மேய்க்க முடியாது. போய் பாத்துட்டு உடனே வந்துடுவேன்…’’
‘‘சரிம்மா!’’ காட்டாற்று வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது அவளுக்குத் தெரியும்.

‘‘வித்யா இன்னிக்கு ஆபீஸோட மேனேஜிங் டைரக்டர் நம்ம வீட்டுக்கு வர்றதா போன் பண்ணியிருக்காரு? எப்ப வரார்னு மட்டும் சொல்லல…’’ பேசி முடிக்கும் முன் வாசலில் கார் நிற்கும்
சத்தம் கேட்டது.

‘‘வாங்க சார் வாங்க!’’
காஸ்ட்லியான கிஃப்ட்டை அவன் கையில்
தந்தார். ‘‘எதுக்கு சார் கிஃப்ட்டெல்லாம்?’’
‘‘நன்றிக் கடன் பா…’’
‘‘என்ன சார் சொல்றீங்க?’’

‘‘எனக்கு ஒரே மகள். ரொம்ப செல்லம்… படிக்கிற வயசுல லவ் பண்ணி எங்க கிட்ட சொல்ல பயந்து காதலன் கூட ஓடிட்டா. ஒரு மாசமா எங்கத் தேடியும் கிடைக்கல. மகளை பாக்காம ரொம்ப உடைஞ்சுப் போய்ட்டோம். போன இடத்துல ஆக்ஸிடன்ட் ஆகி இந்த ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கறதா ஒரு போன் வந்துச்சு. குடும்பத்தோட ஓடிப் போனோம். அவள சமாதானம் பண்ணோம், இப்ப நாங்க எல்லா ஒன்னா இருக்கோம். என் மகளுக்கு சாப்பாடு வாங்கித் தந்து, அவளுக்கு தைரியம் சொல்லி, கூட நின்னது, எங்களுக்கு போன் செஞ்சு வர வெச்சதோட எங்களுக்கு புரியவும் வெச்சது உங்க சாரதா அம்மா தான்.

அதுக்கு நன்றிக் கடனா அவங்களப் பாத்து நன்றி சொல்லதான் வந்தோம் ஷ்யாம்.’’‘‘அவங்க அவசர வேலையா ஊருக்கு போய்ட்டாங்க சார், ரெண்டு நாள்ல வந்துடுவாங்க. நானே அவங்கள கண்டிப்பா உங்க கிட்ட கூட்டிட்டு வரேன் சார்…’’ மேனேஜர் மகிழ்ச்சியோடு விடை பெற்றார்.
‘‘வித்யா உங்க அம்மாக்கு போன் செஞ்சு விஷயத்தை சொல்லிடு…’’‘‘வேண்டாங்க அவங்க இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க? போறப் போக்குல கஷ்டப்படுறவங்களுக்கு ஆதரவா நிக்கறது அவங்க பரம்பரை பழக்கம். பாக்கறவங்களுக்கு இது அதிகப்பிரசங்கியாகக் கூடத் தோணும்…’’அவள் சொல்வதை புரிந்துகொண்ட பரத் தலையை குனிந்து கொண்டான்.

தொகுப்பு: சுதா ராணி

புடவையில் புதுமைப் பெண்ணாய் காட்சியளிக்க…

பெண்கள் பாரம்பரியமிக்க புடவைகளை அணிந்து காட்சி தரும்போது அதன் அழகே தனிதான்.தங்கள் உடல் வண்ணத்துக்கேற்ற புடவையை உடுத்திக் ெகாண்டால் சாதாரண தோற்றமுடைய பெண்களும் கட்டழகிகளாக தோன்றுவார்கள். கருமை நிறமுடைய பெண்கள் வெளிர் நிற புடவைகளை உடுத்தக் கூடாது. அது அவர்களை மேலும் கறுப்பாக எடுத்துக்காட்டும். மாநிறமுடையவர்கள் வெளிர் நிறங்களில் அணிந்தால் எழிலாகவும் இருக்கும். சிவப்பு நிறமுடையவர்கள் அடர் நிற புடவை அணியலாம்.

உயரமான தோற்றமுடைய பெண்கள் அகலக்கரையும், படுக்கைக் கோடுகள், அடர் நிறங்களை உடுத்தினால் அழகாக இருக்கும். சிறு புள்ளிகள், பூக்கள் டிசைனில் உடுத்தினால் குள்ளமாக காண்பிக்கும்.புடவை அடர் நிறமென்றால், பிளவுஸ் வெளிர் நிறத்திலும் அதே போல் புடவை வெளிர் நிறமென்றால் அதற்கு கான்ட்ராஸ்ட் பிளவுஸ் அணியலாம். உடல் முழுவதும் கொடி கொடியான சித்திர வேலைப்பாடுகளும், அகலமான ஜரிகையும் அமைந்த பட்டுப்புடவைகளை திருமண விழாக்களில் கலந்து கொள்ளும் போது உடுத்திச் சென்றால் உயர்வான தோற்றத்தை உண்டாக்கும்.

பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது, மிக நெருக்கமான கட்டம் போடப்பட்ட அழுத்தமான வண்ணம் கொண்ட கைத்தறி புடவைகளை உடுத்தினால் எளிமை தவழும். கண்ணியமான தோற்றத்தை உண்டாக்கும்புடவை உடுத்தும்போது, அதில் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போல் தேர்ந்தெடுத்து உடுத்திக் கொண்டால் அழகாகவும், எடுப்பாகவும் காட்சி தர முடியும்.

-அ.திவ்யா, காஞ்சிபுரம்.

The post சிறுகதை அதிகப்பிரசங்கி appeared first on Dinakaran.

Tags : Vidya ,Kungumum ,Dothi ,Adhiprasangi ,
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்