- விக்ரம்
- கிராமச் சமையல் சேனல்
- சென்னை
- YouTube
- உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு
- சென்னை வர்த்தக மையம்
- நந்தம்பக்கம். ...
- தின மலர்
சென்னை: பிரபல யூட்டியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனல் தனியார் சாக்கலேட் நிறுவனம் விளம்பரத்திற்காக நான்கரை லட்சம் ரூபாய் தருவதற்கு முன் வந்த நிலையில், அதனை நிராகரித்துள்ளது. நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது அவர்களிடம் நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது விலேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த சுப்பிரமணியன் பேசும் போது, சேவை நோக்கத்துடன் மட்டுமே நாங்கள் இந்த தொழிலை நடத்தி வருவதாக கூறினார். விக்ரம் திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை.
இதேபோல் நாங்கள் யூட்டியூப்பில் பதிவிடும் வீடியோவில் விளம்பரம் செய்வதற்காக ஏராளமான நிறுவனங்கள் எங்களை அனுகினார்கள் ஆனால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் வீடியோவை மக்கள் விரும்பி பார்க்கும் இடையே விளம்பரம் வருவதை நாங்கள் விரும்பவில்லை. ஒரு சாக்கலேட் நிறுவனம் எங்கள் வீடியோவில் அவர்களுடைய 10 நொடி விளம்பரத்தை பதிவிட்டால் நான்கரை லட்சம் ரூபாய் தருவதாக எங்களை அனுகினார்கள். ஆனால் நாங்கள் அந்த நிறுவனத்தின் ஆஃபரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே யூட்டியூப்பில் நிறைய விளம்பரங்கள் வருகின்றன. ஆகையால் மேலும் விளம்பரங்களை அதில் பதிவிட நாங்கள் விரும்பவில்லை என கூறினார்.
The post விக்ரம் திரைப்படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட வாங்கவில்லை: வில்லேஜ் குக்கிங் சேனல் பகிர்ந்த தகவல் appeared first on Dinakaran.