×

5ஆண்டுகளாக நடந்து முடிவடைந்த சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உறுதித்தன்மை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

*பொங்கலன்று பயன்பாட்டிற்கு வரும் என தகவல்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே சிறு வாச்சூர் தேசிய நெடுஞ் சாலையில் 5 ஆண்டுகள் ஆமை வேகத்தில் நடந்து முடிவடைந்துள்ள மேம்பால உறுதித் தன்மை குறித்து, இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின், திருச்சி சரக திட்ட இயக் குநர் கணேஷ்குமார் முன் னிலையில், புது டெல்லி யைச் சேர்ந்த இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக் னாலஜி (IIT) பேராசிரியர் சேஷாங் பிஷ்னோய் நேரில் ஆய்வு செய்தார். பொங்கலன்று பயன்பாட் டிற்கு வருமெனத் தகவல் தெரிவித்தார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம் பலூர் அருகே உள்ள சிறு வாச்சூர் பகுதியில் சாலையைக் கடக்கும் விவசாயிகள், பொது மக்கள் ஆண்டுக்கு நான்கைந்துபேர் உயிரிழக் கும் அவலம் ஏற்பட்டு வந்ததால், சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம் பாலம் அமைக்க வேண்டும் என இந்தியதேசிய நெடுஞ் சாலைத்துறை ஆணையத் திற்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், பல்வேறு விவசாய சங்கங்கள் சார் பாக தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வந்தது. இதனை யடுத்து 2016 ஜூலையில் மத்திய சாலைப் போக்கு வரத்துத்துறை திட்ட இயக் குநர் சிறுவாச்சூருக்கு நேரில்வந்து இருவழி உயர் மட்ட மேம்பாலம் அமையக் கோரும் இடத்தைப் பார்வையிட்டு, கள ஆய்வு செய்து அறிக்கையை அனுப்பிவைத்தார்.

இதனையடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பாக ரூ14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2018 ஆம்ஆண்டு மே-மாதம் 14ம்தேதி மேம்பாலம் கட்டுவதற்காக, அப்போதைய மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமே அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டதோடு கிடப்பில் போடப்பட்ட இந்த மேம்பாலக் கட்டுமானப் பணிகள் 20 மாதங்களுக்குப் பிறகுதான் மீண்டும் தொடங்கியது.

தொடங்கிய பணிகள் தொய்வின்றி நடத்தி முடிக் கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 2023 ஜனவரி மாதம் வரை நடக்கிறதா நிறுத்தப்பட்டுவிட்டதா என தெரியாமல்5ஆண்டுகளாக ஆமை வேகத்தைவிடக் குறைந்த வேகத்தில் நடந்து வந்தது. இதனால் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், பொது மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகிச் சென்றனர். குறிப்பாக சிறுவாச்சூர் கிராமத்து நுழைவு வாயிலுக்கு அவ்வூரைச் சேர்ந்த விவசாயிகளும் பொது மக்களும் வந்து செல்லும் போதெல்லாம், போக்கு வரத்து ஸ்தம்பித்து அரை மணிநேரத்திற்கு ஒரு முறை நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுவந்தது.

சிறுவாச்சூர் மேம்பாலத்திற்கு பிறகு அறிவித்த சிறுகன்பூர் மேம்பால கட்டு மானப்பணிகள் முடிவடைந்து மேம்பாலம் பயன் பாட்டிற்கே வந்து விட்டது. அதை விட பெரம்பலூர் மாவட்டத்திலேயே, ஆலத்தூர், பாடாலூர் பகுதிகளில் மேம்பாலம் அமைத்திட தொடங்கிய சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணிகளும் முடிவடைய உள்ளதைப் பார்த்து, சிறுவாச்சூர் ஊர்க்காரர்க ளும், வாகன ஓட்டிகளும் அதிருப்தியின் இருந்து வந்தனர்.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில்தான் மேம்பால கட்டுமானப் பணிகள் மீண்டும் நடைபெற்றன. இருந்தாலும் சிறுவாச்சூர் மேம்பாலம் மழைக்கும் வெயிலுக்கும் தாக்குப் பிடிக்காமல் நீர்க்கசிவும், விரிசலும் ஏற்பட்டு, திறப்பு விழா காணும்முன்பாக மராமத்து பணிகளை மேற்கொள்ளும் நிலையே ஏற்பட்டது. இதற்காக நீர்க் கசிவைத் தடுக்கும் தார்ப் பாய் பேஸ்டுகளை பாலத்தின் உட்புறம் ஒட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.மேலும்வெயிலுக்கு தாங்காமல் விரிசல் விட்ட இடங்களை சிமென்டால் பூசி, அதுவும் வெளியே தெரியாதபடிக்கு தார்ப்பாய் பேஸ்ட் ஒட்டப்பட்டது. அதோடு பாலத்தின் உட் புறம் சிமென்ட் பூச்சுகள் உதிராதிருக்க இரும்பு பைப்புகளைக் கொண்டு தாங்கிப் பிடிக்கும் வகையில் சீலிங் பகுதி மாற்றப் பட்டது.

இதனால் திறப்பு விழாெகாணும் முன்பாக, மேம்பாலத்தின் ஸ்திரத் தன்மையை ஆய்வு செய்த பிறகே திறக்க வேண்டு மென வலியுறுத்தி தினகரன் நாளிதழ் கடந்த செப். 13ம்தேதி வெளியிட்ட செய் தியைப் பார்த்த கலெக்டர் கற்பகம், நேரில் ஆய்வு செய்த பிறகு, மேம்பாலத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்த பிறகே திறக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் சுதாரிப்பான ஒப்பந்ததார்கள் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது முடித்துள்ள நிலையில் கடந்த 1ம்தேதி சோதனை ஓட்டம் பார்ப்பதற்காக கட்டி முடித்துள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

5ஆண்டுகள் ஆமைவேகத்தில் நடந்து வந்து தற்போது முடிவடைந்துள்ள மேம் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து,நேற்று(7ம்தேதி) இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின், திருச்சிசரக திட்டஇயக்கு நர் கணேஷ்குமார் முன்னிலையில், புது டெல்லியைச் சேர்ந்த இண்டியன் இன்ஸ் டிட்யூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) பேராசிரியர் சேஷாங் பிஷ்னோய் நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஆய் வறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் சீக்கிரம் ஒப்படைத்து விடுவேன்.

மேம்பாலத்தில் ரோடு மார்க்கிங் செய்வது, ரிப்ளெக்டர்கள் பொருத்தும் பணிகள் மட்டுமே உள்ள நிலையில் பொங்க லன்று மேம்பாலத்தை பய ன்பாட்டிற்குக் கொண்டு வர லாம் எனத் தெரிவித்தார். ஆய்வின்போது, திருச்சி டோல்வே பிரைவேட் லிமி டெட் திட்ட மேலாளர் துர்கா பிரஷாத் ரெட்டி, சிவில் இன்ஜினியர் சிவசங்கரன், நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேம்பால கட்டமைப்பு

இந்த மேம்பாலம் 12 மீட்டர் அகலமும் 5.50மீட்டர் உயர மும், விழுப்புரம் மார்க்கத்தில் 161.30 மீட்டர் நீளமும், திருச்சி மார்க் கத்தில் 355.95 மீட்டர் மற்றும் 402.56மீட்டர் நீளமும் கொண்டதாகவும் அறிவித்து தொடங்கப்பட்டது.

The post 5ஆண்டுகளாக நடந்து முடிவடைந்த சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உறுதித்தன்மை ஐஐடி பேராசிரியர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : IIT ,Siruvachur National Highway ,Pongal Perambalur ,Perambalur ,National Highway Authority of India ,Trichy ,Dinakaran ,
× RELATED வங்காள விரிகுடா, பெருங்கடல்கள்...