×

பட்டாம்பி அருகே கும்பிடி ஐயப்பன் கோவில் தாலப்பொலி விழா

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே கும்பிடி ஐயப்பன் கோவில் தாலப்பொலி விழா வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகே கும்பிடி ஐயப்பன் கோவிலில் தாலிப்பொழி திருவிழாவையொட்டி கோவிலில் நேற்றுமுன்தினம் காலை கணபதிஹோமம் நடைபெற்றது.முன்னதாக கோவில் நடைத்திறந்தவுடன் மூலவருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து திரளாக பக்தர்கள் கலந்துக்கொண்டு மூலவருக்கு காணிக்கைகள் மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்தி பக்திபரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து மாலை 6 மணிக்கு 3 யானைகள் அலங்காரங்கள் அணிவகுப்புடன்,பஞ்சவாத்யங்கள் அதிர கோவில் மைதானத்தில் உற்சவர் யானை மீது பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இவ்விழா ஊர்வலத்தில் சிறுவர் சிறுமிகள் கார்த்திகை தீபங்கள் ஏந்தி ஐயப்பனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டனர்.கோவில் சுற்றுப் பிரகாரங்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டதால் கோவில் சுற்றுவட்டாரம் ஜொலித்தன.

The post பட்டாம்பி அருகே கும்பிடி ஐயப்பன் கோவில் தாலப்பொலி விழா appeared first on Dinakaran.

Tags : Thalappoli festival ,Kumbidi Ayyappan temple ,Pattambi ,Palakkad ,Palakkad district ,Ganapathi Homam ,Thalippozhi festival ,
× RELATED பட்டாம்பி அருகே பர்னீச்சர் தொழிற்சாலையில் தீ விபத்து