×

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2-ம் நாள் அமர்வு தொடங்கியது: 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

சென்னை: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2-ம் நாள் அமர்வு தொடங்கியது. நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்றன. மேலும் 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்ள இயலாததால் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வருத்தம் கேட்டு வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வு தொடங்கியது. மாநாட்டில் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பு பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது; மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகின்றன. நடைபெற்று வரும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் கடைசி நாளான இன்று 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. முதல் நாளான நேற்று 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களின் மூலம், ரூ.5.5 லட்சம் கோடிக்கு முதலீடுகள் கையெழுத்தாகி உள்ளன.

The post சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2-ம் நாள் அமர்வு தொடங்கியது: 300க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : World Investors Conference ,Chennai ,Chennai Trade Centre ,Nandambakk ,Singapore ,Korea ,United States ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...