×

மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

வருசநாடு, ஜன. 8: மயிலாடும்பாறை கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலர் குடியிருப்பு கட்டிடம் யூனியன் நிர்வாகத்தின் மூலமாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், வருசநாடு, சிங்கராஜபுரம், தங்கம்மாள்புரம், எட்டப்பராஜபுரம் உள்ளிட்ட 18 ஊராட்சிகளையும் நிர்வகிக்கும் மைய கட்டிடமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கட்டிடம் முறையாக பராமரிக்கப்படாததால், அதன் மேற்கூரைகள் சேதமடைந்து, கட்டிடம் இடிந்து விழும்நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகையால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடத்தை கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மயிலாடும்பாறை அருகே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mayilatumparai ,Varusanadu ,Mayiladumparai ,Panchayat Union Officer ,Residence Building ,Union Administration ,Mayiladumbarai ,Kadamalaikundu ,Kandamanur ,Singarajapuram ,Thangammalpuram ,Ettapparajapuram ,Dinakaran ,
× RELATED கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு