×

குமுளி அருகே புலி நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா

கூடலூர், ஜன. 8: தமிழக எல்லை குமுளி அருகே உள்ள பீர்மேடு பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். தமிழக எல்லை குமுளி அருகே உள்ள பீர்மேடு சந்திப்பில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள முண்டைக்கல் காலனியில் நேற்று முன்தினம் தோட்டத்து கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசு மாடு ஒன்று வனவிலங்கு தாக்கி இறந்து கிடந்தது. இதேபோல் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட கன்றுக்குட்டியும் புலிக்கு இரையாகியுள்ளது.

கன்றுக்குட்டியை புலி தாக்கும்போது அது எழுப்பிய ஓலத்தை அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் கேட்டுள்ளனர். வாகனத்தின் சத்தம் கேட்டதும் புலி அருகில் இருந்த கொட்டகைக்கு ஓடியது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் வனத்துறையிடம் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை உறுதி செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தினர். கடந்த 2 நாட்களுக்கு முன் பீர்மேடு ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோயில் வளாகம் மற்றும் சுவரில் புலியின் கால் தடங்கள் தென்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

The post குமுளி அருகே புலி நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா appeared first on Dinakaran.

Tags : Kumuli ,Cuddalore ,Peermedu ,Tamil Nadu border Kumuli ,Mundaikal ,
× RELATED பெரியாறு புலிகள்...