×

சிமெண்ட் நிறுவன டீலர் வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது

தேனி, ஜன. 8: போடி அருகே வெம்பக்கோட்டையை சோந்தவர் அய்யப்பன்(60). இவர் போடியில் கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக திருச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கே பணிபுரிந்து வந்த வேல்மணி என்பவருடன் நட்புடன் பழகி வந்தார். இவர் மூலமாக திருச்சியை சேர்ந்த அசோக்சரவணன்(42) என்பவரின் நட்பு கிடைத்தது. கடந்த 2017ம் ஆண்டு போடியில் அய்யப்பன் நடத்தி வரும் கட்டுமானப்பொருள் விற்பனையகத்திற்கு திருச்சியில் இருந்து வேல்மணியும், அசோக்சரவணனும் வந்தனர்.

இவ்விருவரும் குஜராத் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் நிறுவனத்திற்கு மதுரையில் டீலர் வழங்க உள்ளனர். இதனை பெற்றுத்தருவதாகவும், இதற்கு முன்பணமாக ரூ.10 லட்சம் கேட்டனர். இதனை நம்பிய அய்யப்பன், ரூ.10 லட்சத்தை வேல்மணி மற்றும் அசோக்சரவணனிடம் அளித்தார். ஆனால், சிமெண்ட் நிறுவன டீலர் பெற்றுத்தராமல் மோசடி செய்து விட்டனர். இது குறித்து அய்யப்பன் தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம், இப்புகார் சம்பந்தமாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதனையடுத்து, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வேல்மணி மற்றும் அசோக் சரவணன் ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதனையறிந்த இருவரும் தலைமறைவாகினர். இதில் அசோக்சரவணன் கோவை மாவட்டம் அன்னூரில் மனைவியை தங்க வைத்து விட்டு அரியானா மாநிலத்திற்கு சென்று விட்டார். இவர் அன்னூர் வந்திருப்பதை அறிந்த தேனி போலீசார் நேற்று முன்தினம் அன்னூர் சென்று, அசோக் சரவணனை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய வேல்மணியை தேடி வருகின்றனர்.

The post சிமெண்ட் நிறுவன டீலர் வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Theni ,Sondavar Ayyappan ,Vembakkottai ,Bodi ,Trichy ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்