×

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற ரேஷன்கடை விற்பனையாளர்கள் மூலம் நாளை வரை டோக்கன்

 

திருப்பூர், ஜன.8: பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற ரேஷன்கடை விற்பனையாளர்கள் மூலம் நாளை வரை டோக்கன் வழங்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீள கரும்பு 1 அடங்கிய தொகுப்பும், ரூ.1000 ரொக்க பணமும் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே திருப்பூர் மாவட்டத்தில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி அவர்களின் இல்லத்திற்கு சென்று நாளை (செவ்வாய்க்கிழமை) வரை சம்பந்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டைக்குரிய ரேஷன் கடையில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி டோக்கன் பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் யாரும் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணி குறித்து புகார்கள் ஏதும் இருப்பின் அதனை தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 0421-2218455 மற்றும் 1077ஐ என்ற எண்களை தொடர்புகொள்ளலாம். மேலும், மாநில அளவிலான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

The post பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற ரேஷன்கடை விற்பனையாளர்கள் மூலம் நாளை வரை டோக்கன் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Tirupur ,Collector ,Kristhraj ,Tirupur District ,Kristaraj ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்