×

நடுவானில் கதவு உடைந்த விவகாரம் ‘போயிங் 737’ விமானங்கள் பறக்க தடை: அமெரிக்கா நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவின் போர்ட்லேண்டிலிருந்து ஒன்டாரியோவுக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் போயிங் 737-9 மேக்ஸ் விமானம் கடந்த 5ம் தேதி சென்றது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் கதவு நடுவானில் பெயர்ந்து விழுந்தது. விமானம் 16,000 அடி உயரத்தில் பறந்த போது நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் போயிங் விமானத்தை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்கள் பறக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் அந்த விமானங்கள் பறக்க அனுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நடுவானில் கதவு உடைந்த விவகாரம் ‘போயிங் 737’ விமானங்கள் பறக்க தடை: அமெரிக்கா நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : US ,Washington ,Alaska Airlines ,Portland, USA ,Ontario ,America ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...