×

கட்சி நிதி திரட்டியதில் முறைகேடு ஜப்பான் மாஜி அமைச்சர் கைது

டோக்கியோ: ஜப்பானில் லிபெரல் ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. புமியோ கிஷிடா பிரதமராக உள்ளார். ஆளும் கட்சியை சேர்ந்தவர் யோஷிடாக்கா இகேடா. முன்னாள் துணை அமைச்சரான யோஷிடாக்கா இகேடா, மறைந்த பிரதமர் ஷின்சோ அபேயின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இதனால், ஆளும் கட்சியில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தார். லிபரல் ஜனநாயக கட்சிக்கு ரூ.34.52 கோடி நிதி திரட்டப்பட்டது.

இதுதொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனையின் மூலம் நிதி திரட்டினர். இதில்,யோஷிடாக்கா இகேடா ரூ.2.30 கோடி லஞ்சம் பெற்றுள்ளார். இந்த தொகை குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அரசியல் நிதி கட்டுப்பாடு சட்டங்களின் கீழ் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிந்த நிலையில்,நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இகேடாவை கட்சியில் இருந்து பிரதமர் கிஷிடா உத்தரவிட்டுள்ளார்.

The post கட்சி நிதி திரட்டியதில் முறைகேடு ஜப்பான் மாஜி அமைச்சர் கைது appeared first on Dinakaran.

Tags : minister ,Tokyo ,Liberal Democratic Party ,Japan ,Bumio Kishida ,Yoshitaka Ikeda ,vice minister ,Shinzo Abe ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...