×

ரஞ்சி ரவுண்டப்

* குஜராத் அணிக்கு எதிராக வல்சத், படேல் ஸ்டேடியத்தில் நடக்கும் ரஞ்சி சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணிக்கு 299 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் குஜராத் 236 ரன், தமிழ்நாடு 250 ரன் எடுத்தன. குஜராத் 2வது இன்னிங்சில் 312 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஹிங்ராஜியா 52, உமாங் குமார் 89, ரிபல் படேல் 81 ரன் விளாசினர். தமிழக பந்துவீச்சில் சாய் கிஷோர் 4, சந்தீப் 3, திரிலோக் 2, வாஷிங்டன் 1 விக்கெட் வீழ்த்தினர். 299 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 18, சாய் கிஷோர் 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

* டெல்லி அணிக்கு எதிராக அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் டி பிரிவு லீக் ஆட்டத்தில் புதுச்சேரி அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் டெல்லி 148 ரன், புதுச்சேரி 244 ரன் எடுத்தன. 96 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய டெல்லி 3ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்துள்ளது. கை வசம் 2 விக்கெட் இருக்க அந்த அணி 30 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

* மும்பை அணியுடன் பாட்னாவில் நடக்கும் பி பிரிவு லீக் ஆட்டத்தில் பீகார் அணி இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. முதல் இன்னிங்சில் மும்பை 251 ரன், பீகார் 100 ரன் எடுத்தன. ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை விளையாடும் பீகார் 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன் எடுத்துள்ளது. முன்னணி வீரர்கள் கூட சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில், பீகார் அணியில் அறிமுகமான 12 வயது சிறுவன் வைபவ் சூரியவன்ஷி (இடது கை தொடக்க வீரர்) முதல் இன்னிங்சில் 19 ரன், 2வது இன்னிங்சில் 12 ரன் எடுத்து அவுட்டானார்.

The post ரஞ்சி ரவுண்டப் appeared first on Dinakaran.

Tags : Ranji Roundup ,Tamil Nadu ,Ranji C ,Gujarat ,Patel Stadium, ,Valsad ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து